Enable Javscript for better performance
உத்தமபாளையத்தில்ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தரக் கோரி தர்னா- Dinamani

சுடச்சுட

    

    உத்தமபாளையத்தில்ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தரக் கோரி தர்னா

    By DIN  |   Published on : 24th March 2018 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அருந்ததியினர் சமுதாயத்தினருக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டதை மீட்டுத் தரக் கோரி, அச்சமுதாயத்தினர் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    உத்தமபாளையத்தை அடுத்த சின்னஓபுலாபுரத்தில் அருந்ததியினர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இடம் சுமார் 40 ஆண்டுகளாக பிற சமுதாயத்தினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினரிடம் பல முறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.
    இந்நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தின் வழியாக விவசாய நிலம் மற்றும் கோயிலுக்கு செல்ல முடியாமல் வெள்ளிக்கிழமை பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அருந்ததியினர் சமுதாயத்தினர், 'பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தை மீட்டுத்தர வலியுறுத்தி, உத்தமபாளையம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் சாலையோரம் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதைத்தொடர்ந்து உத்தமபாளையம் வட்டாட்சியர் பாலசண்முகத்திடம் புகார் அளித்தனர்.
    மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில், பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai