Enable Javscript for better performance
உத்தமபாளையம் பேரூராட்சி கடை ஏலம் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ஒத்தி வைக்கப்பட்டது.
    உத்தமபாளையம் பேருந்து நிலைய வளாகத்தில் பேரூராட்சிக்கு சொந்தமாக 17 கடைகள் உள்ளன. இவற்றில் இருமாடி வணிக வளாகத்தில் 4 கடைகளும், பேருந்து நிலையம் உள்ளே உள்ள ஒரு கடை உள்பட 5 கடைகளை வெள்ளிக்கிழமை ஏலம் விடுவதாக பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஏலம் குறித்து முறையாக விளம்பரம் செய்யவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மாவட்ட நிர்வாகத்திடம் வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்தார்.
    இதையடுத்து முறையாக அறிவிப்பு வெளியிட்ட பின்னர் ஏலம் விடுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஏலம் நடைபெறும் என பேரூராட்சி செயலர் பாலசுப்பிரமணி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai