Enable Javscript for better performance
கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரன் தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் போக்குவரத்து ஆய்வாளர் பாபு, மாணவ-மாணவிகளிடம் போக்குவரத்து விதிகள் குறித்து எடுத்துரைத்தார்.
    கல்லூரி நிர்வாக இயக்குனர் ஜேக்கப் தாமஸ், கல்லூரி முதல்வர் கெசி செல்வவிஜிலா, ஆசிரியர்கள், போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai