Enable Javscript for better performance
கூடலூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை கிடங்கால் தொற்று நோய் பரவுவதாகக் கூறி நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    கூடலூர் நகராட்சி, 10 ஆவது வார்டு பெத்துகுளம் பகுதியில் நகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. சுகாதாரத் துறை சார்பில், நகரில் சேகரிக்கப்படும் குப்பையை இங்கு வந்து மொத்தமாக குவித்து வைத்துள்ளனர். பல ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த குப்பைகளில் இருந்து, துர்நாற்றம் வீசுகிறது. மேலும் காற்று வீசும் போதெல்லாம், இங்கிருந்து பறக்கும் குப்பை தூசிகள், அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இந்த குப்பை தூசிகளை சுவாசிப்பதால், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நேரங்களில் குப்பையை தீ வைத்து எரிப்பதால் புகை மண்டலமாகி, மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார்கள் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், 10 ஆவது வார்டு பொதுமக்கள், வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    இதையடுத்து அவர்களிடம், ஆணையர் சத்தியநாதன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதி கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai