Enable Javscript for better performance
மதுபானங்களை பதுக்கி வைத்து விற்றவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டம், கூடலூரில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    கூடலூர் பகுதியில் அரசு மதுபானக்கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி, பதுக்கி வைத்து, இரவு 10 மணியிலிருந்து பகல் 12 வரை உள்ள நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தெற்கு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மயானத்தில் சந்தேகப்படும்படியாக ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார். போலீஸார் அவரை விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவர் நின்றிருந்த இடத்தின் அருகே, புதர் செடி மறைவில் ஒரு பை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 100 மதுபாட்டில்கள் இருந்தன. போலீஸாரின் தொடர் விசாரணையில் அவர், கீழக்கூடலூரைச் சேர்ந்த காசிராஜன் (38), என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai