Enable Javscript for better performance
முல்லைப் பெரியாற்றிலிருந்து ஆங்கூர்பாளையம் ஊராட்சிக்குரூ.54.50 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும் ப- Dinamani

சுடச்சுட

    

    முல்லைப் பெரியாற்றிலிருந்து ஆங்கூர்பாளையம் ஊராட்சிக்குரூ.54.50 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும் புதிய குடிநீர் திட்டத்துக்கு சோதனை ஓட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆங்கூர்பாளையம் ஊராட்சிக்கு ரூ.54.50 லட்சம் மதிப்பில், முல்லைப் பெரியாறு- சுருளியாற்றில், உறை கிணறு அமைத்து, குடிநீர் எடுக்கும் புதிய திட்டப் பணிகள் முடிவடைந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
    ஆங்கூர்பாளையம் ஊராட்சியின் உட்கடை கிராமங்களாக, திருவள்ளுவர் காலனி, சாமாண்டிபுரம், மஞ்சள்குளம், செல்வபுரம் ஆகியவை உள்ளன. இவற்றுக்கு லோயர்கேம்ப்பில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து சரிவர குடிநீர் விநியோகம் இல்லாததால், இன்று வரை ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் தண்ணீரையே இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரூ.54.50 லட்சம் மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு பகுதியான சுருளியாற்றிலிருந்து உறை கிணறு அமைக்கப்பட்டு, குழாய் மூலம், ஆங்கூர்பாளையம் ஊராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்ய, திட்டப்பணிகள் முடிவுற்று 2 கட்ட சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. மூன்றாவது சோதனை ஓட்டம் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
    இதுகுறித்து கம்பம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ரெங்கராஜன், சேதுக்குமார் ஆகியோர் கூறும் போது, சுருளியாற்றிலிருந்து ஆங்கூர்பாளையம் ஊராட்சிக்கு புதிய குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவுற்று சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ரூ.10 லட்சம், ஊரக உள்கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம், சட்டப் பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.13 லட்சம், தாய் திட்டத்திலிருந்து ரூ.22 லட்சம், மொத்தம் ரூ.54.50 லட்சம் செலவில் நடைபெற்றது.
    சோதனை ஓட்டத்தின் போதே ஆங்கூர்பாளையம் ஊராட்சி மக்கள் குடிநீரை பிடித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai