Enable Javscript for better performance
ஆண்டிபட்டி அருகே டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து சம்பவ இடத்திலே வெள்ளிக்கிழமையன்று 2 பேர் உயிரிழந்தனர். 
    ஆண்டிபட்டி அருகே நல்லமுடிபட்டியை சேர்ந்த குருமூர்த்தி (19) இவர் குன்னூரில் இருந்து டிராக்டரில் தண்ணீர் எடுத்து  வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த பாலாஜி (12) என்ற சிறுவன் உடன் வந்துள்ளார். 
    இந்த டிராக்டர் நல்லமுடிபட்டி அருகே செல்லும் போது வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. 
       இதில் இருவரும் டிராக்டருக்கு அடியில்  சிக்கியதில் பலத்த காயமைடந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ராஜதானி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai