Enable Javscript for better performance
கம்பத்தில் இரவு நேரங்களில் மணல் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கம்பம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இரவு நேரங்களில்   டிப்பர் லாரிகள் மூலம் மணல்  கடத்தல்  அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    தேனி மாவட்டம் கம்பம் மேற்குமலை தொடர்ச்சி அடிவாரப்பகுதிகளான ஏகழுத்து, புதுக்குளம், மணிகட்டி ஆலமரம், ஊத்துக்காடு மற்றும் பழைய சுருளி அருவி சாலை அடிவாரம், முல்லை பெரியாற்றின் கரையோரங்கள்  உள்ளிட்ட  இடங்களில் இரவு நேரங்களில் மணல் மற்றும் மண் கடத்தல் அதிகளவில் நடைபெறுகிறது. 
    இரவு நேரங்களில் மணல் கடத்தல் லாரிகள் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று விடுகின்றன. மணல் கடத்தும் சமூக விரோதிகளால்  இயற்கை வளங்கள் கொள்ளையடிப்பதோடு மட்டு மல்லாமல், இரவு நேரங்களில் சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளன.  மோதிய வாகனங்கள் எது என்று தெரியாமல், போலீஸார் வழக்குகளை நிலுவையிலேயே வைத்துள்ளனர். 
    கம்பம் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக தொடர் புகார்கள் வந்ததையடுத்து, தேனி மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் தணிக்கை செய்தார். இதனைத்தொடர்ந்து  பாலசுப்பிரமணி என்பவர் மீது கம்பம் வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும் இரவு நேரங்களில் மணல் கடத்தல் தொடர்ந்த வண்ணமை உள்ளது.  
    தற்போது முல்லை பெரியாற்றில் தண்ணீர் வரத்து குறைவால் சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன் பட்டி கரையோரங்களில் ஆற்று மணல் திருட்டு அதிகரித்துள்ளது.  தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும்  கனிமவளத்துறையினரும் நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai