Enable Javscript for better performance
கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில்  பங்குனி உத்திர திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில்  பங்குனி உத்திர திருவிழா

    By DIN  |   Published on : 31st March 2018 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கம்பம்  பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திரத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் அமைந்துள்ள சுருளிஆண்டவர் கோயிலில் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திர திருவிழாவையொட்டி  அதிகாலையில் முருகனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, மலைப்பாதையில் நடந்து கோவிலுக்கு வந்து  நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக சுருளி அருவியில் நீராடி பூதநாராயணசாமி, ஸ்ரீ ராம ஆஞ்சநேயர், கருப்பசாமி கோவில்களில் வழிபாடுகள் செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ராயப்பன்பட்டியில் உள்ள ஸ்ரீ சண்முகநாதர் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழாவையொட்டி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள் சண்முகநாதன் மலைச்சாலை வழியாக நடந்து சென்று  சுவாமி தரிசனம் செய்தனர்.
    கம்பம் நகரில் உள்ள சுருளிவேலப்பர் கோவில், கம்பராயப்பெருமாள் காசி விசுவநாதர் சுவாமி கோயில், கூடலூரில் கூடல் சுந்தரவடிவேலர் சுவாமி கோயில்,  லோயர்கேம்ப் ஸ்ரீ வழிவிடு முருகன் கோயில்களில் நடைபெற்ற பங்குனி உத்திரத்திருவிழாவில்  ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai