Enable Javscript for better performance
குப்பை கழிவுகளால் திணறும் கூடலூர் தொற்று நோய் பரவும் அபாயம்- Dinamani

சுடச்சுட

    

    குப்பை கழிவுகளால் திணறும் கூடலூர் தொற்று நோய் பரவும் அபாயம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடலூர் நகராட்சி குப்பை கிடங்கிற்கு வாகனங்கள் செல்ல தடை ஏற்படுத்தியதால், தெருவெங்கும்  தேங்கும் குப்பைகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் சில நாட்களுக்கு முன்னர் 10 ஆவது வார்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அருகில் உள்ள குப்பை கிடங்கால் மூச்சுதிணறல், அலர்ஜி உள்ளிட்ட நோய்கள் வருவதாக குற்றம்சாட்டினர். அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்வதாக கூறியும், திருப்தி ஏற்படாததால், சிலர் நகராட்சி குப்பை கிடங்குக்கு சென்றனர். 
    அங்கு நுழைவு வாயிலில் குப்பை கொட்டும் நகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் உள்ளே செல்லாமல் இருக்க மார்ச் 27 ஆம் தேதி சாலையில் பள்ளம் தோண்டி தடை ஏற்படுத்தி விட்டு சென்று விட்டனர். 
    நகரில் குப்பையை சேகரம் செய்த வாகனங்கள் உள்ளே சென்று கொட்டமுடியாமல் ஆங்காங்கே நிறுத்திக் கொண்டது.  மேலும் நகராட்சி தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுகளை எடுக்கவில்லை. இதனால் தேங்கியுள்ள குப்பைகளால் தொற்று நோய் அபாயம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு,  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 
    இதுபற்றி நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்ட போது, குப்பை கொட்ட கிடங்கில் தடை ஏற்படுத்தி உள்ளனர். இதுபற்றி பரிசீலித்து மாற்று இடத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai