Enable Javscript for better performance
குரங்கணி அருகே மரம் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    குரங்கணி அருகே மரம் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி சாவு

    By DIN  |   Published on : 31st March 2018 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போடி அருகே குரங்கணியில் வெள்ளிக்கிழமை மரம் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். 
      போடி டி.வி.கே.கே.நகரை சேர்ந்த கருப்பையா மகன் வீரப்பெருமாள் (29). இவர் குரங்கணி அருகே மேல்முட்டம்  தனியார் காப்பி தோட்டத்தில்  இருந்து டிராக்டரில் மரங்களை ஏற்றிக்கொண்டு வந்தார்.  மரங்களுக்கு மேல் டிராக்டர் உரிமையாளர் முத்துகிருஷ்ணன் உட்கார்ந்து வந்துள்ளார். வளையில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்தது. இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கிய முத்துகிருஷ்ணன் பலத்த காயமடைந்தார். 
        அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.  குரங்கணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் ஓட்டுநர் வீரப்பெருமாளை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai