Enable Javscript for better performance
சுருளியாறு மின் நிலைய குடியிருப்பில் பாம்புகள்- Dinamani

சுடச்சுட

    

    சுருளியாறு மின்நிலைய குடியிருப்புகளுக்குள் புகுந்த பாம்புகளை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் அனுப்பினர். 
       தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளியாறு மின்சார உற்பத்தி நிலைய வளாகத்தில் பணியாளர்கள் குடியிருப்புகள் உள்ளது. வெள்ளிக்கிழமை குடியிருப்பு பகுதிக்குள் பாம்புகள் புகுந்து விட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் மற்றும் மேகமலை  வன உயிரின சுற்றுச் சூழல்பாதுகாப்பு அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் 7 மற்றும் 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்புகளை பிடித்து அருகே உள்ள சுருளியாறு வனப்பகுதிக்குள் விட்டனர். 
       மேலும் நாராயணத்தேவன்பட்டி கால்நடை மருந்தகத்தில் புகுந்த மூன்று கண்ணாடி விரியன் பாம்புகளை பிடித்து, காமயகவுண்டன்பட்டி வனப்பகுதிக்குள் விட்டனர். இதுபற்றி வன உயிர் பாதுகாப்பு ஆர்வலர்கள் சுந்தர், விஜய் கூறியதாவது, கோடைகாலமாதலால் பாம்புகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது.  அதனால் பாம்புகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் உடனடியாக  வனத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.  பாதுகாப்புடன் பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்படும் என்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai