Enable Javscript for better performance
பெரியகுளம் அருகே விபத்தில் காய்கறி வியாபாரி பலி- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியை சேர்ந்தவர் நல்லுச்சாமி (52). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.  இவர் வெள்ளிக்கிழமை காலை காய்கறி வியாபாரம் முடித்து விட்டு பெரியகுளம் - வத்தலக்குண்டு சாலையில் செல்லும் போது, பின்னால் வந்த லாரி மோதியது.
     இதில் பலத்த காயமடைந்த நல்லுச்சாமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் விஜயகுமாரை(28) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai