Enable Javscript for better performance
போடியில் பங்குனி உத்திரத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
      போடியில், ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை சுப்பிரமணியர் - வள்ளி திருமணம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுவாமிக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. வள்ளி தெய்வானையுடன் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
        மாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவர் நகர் வலமாக அழைத்து செல்லப் பட்டார். திருவள்ளுவர் சிலை, தெற்கு ராஜ வீதி, கீழக்கு ராஜ வீதி, தேரடி, வடக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி வழியாக மீண்டும் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai