Enable Javscript for better performance
போடி அருகே பொட்டல்களம் கிராமத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிய இளைஞர்கள்- Dinamani

சுடச்சுட

    

    போடி அருகே பொட்டல்களம் கிராமத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிய இளைஞர்கள்

    By DIN  |   Published on : 31st March 2018 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போடி அருகே பொட்டல்களம் கிராமத்தில் வியாழக்கிழமை, சாலையோரத்தில் இருந்த சீமைக் கருவேல மரங்களை விவேகானந்தா இளைஞர் மன்றத்தினர் அகற்றினர்.
     போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொட்டல்களம். இக்கிராமத்திற்கு செல்லும் இரண்டு தார்ச்சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் சாலையோரத்தில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து சாலை மிகவும் குறுகலாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.  இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
         இந்நிலையில் விவேகானந்தா இளைஞர் மன்றத்தினர், பள்ளி மாணவர்கள்  இணைந்து பொட்டல்களத்திலிருந்து மீனா விலக்கு மற்றும் மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் இரு பக்கமும் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றினர். 
    சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றிய இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளை கிராம மக்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai