Enable Javscript for better performance
கன்னிவாடி அருகே பாட்டியை அரிவாளால் வெட்டிய பேரன்- Dinamani

சுடச்சுட

    

    கன்னிவாடி அருகே  புதன்கிழமை பாட்டியை அரிவாளால் வெட்டிய பேரனை போலீஸார் தேடி வருகின்றனர்.
     திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகேயுள்ள சுரைக்காய்பட்டி தோட்டத்துச்சாலையைச் சேர்ந்த மூதாட்டி லோகுமணி. இவரது மகன் வழிப்பேரன்  சூர்யா (25) . இவர் தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி பாட்டி லோகுமணியை அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    இந்நிலையில் புதன்கிழமை தோட்டத்துச்சாலையில் இருந்த லோகுமணியிடம் சென்று தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டி விட்டு சூர்யா தப்பியோடி விட்டார். 
    பலத்தகாயம் அடைத்த  லோகுமணி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில்  கன்னிவாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சூர்யாவை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai