Enable Javscript for better performance
கம்பத்தில் அன்றில் இலக்கியச் சுற்றம்  5-ஆம் ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டம் கம்பம் பூங்கா திடலில் அன்றில் இலக்கிய கழகத்தின் ஐந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, புதன்கிழமை இலக்கிய சாரல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
    ஏலவிவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியை திலகபாரதி தலைமை வகித்தார். முன்னாள் நகரசபை தலைவர் பாஸ்கரன், சுருளிவேலு, பிரேம்நஸீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடிவேல் வரவேற்றார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் வாழ்த்தி பேசினார். 
    ஆசிரியர்கள் முத்துக்கண்ணன், சோமநாதபாரதி, பூர்ணிமா, ரியாஸ், முத்தீஸ்வரன் கவிதைகளை வாசித்தனர். இலக்கியங்களின் முதன்மை நோக்கம் இன்புற்று  மகிழவா என்ற தலைப்பில் சித்தேந்திரன், சுரேகா, பின்பற்றி வாழவா என்ற தலைப்பில் முனைவர் யாழ்ராகவன், மணிமொழி ஆகியோர் பேசினர். 
     பட்டி மன்றத்தில்  பேராசிரியர் முகமது ரபீக் நடுவராக இருந்தார்.  ஆசிரியர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai