Enable Javscript for better performance
கூலித் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கூலித் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

    By DIN  |   Published on : 18th May 2018 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போடியில் வியாழக்கிழமை கோயில் திருவிழாவில் கூலித் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.
    போடியில் உள்ள முருகன் ஏகாலி சந்தில் வசித்து வருபவர் சீனிவாசன் (40). கூலித் தொழிலாளி. இவர் இப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளார்.  அப்போது  பால்குடம் எடுத்து வந்த சிறுமிகளை, இதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜ்குமார் (36)  தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.  இதனை சீனிவாசன் கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சீனிவாசனை தாக்கியதோது,  ராஜ்குமார் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் போடி நகர்  போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai