Enable Javscript for better performance
தேனியில் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மே 21-இல் இருந்து ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல முடிவு- Dinamani

சுடச்சுட

    

    தேனியில் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மே 21-இல் இருந்து ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல முடிவு

    By DIN  |   Published on : 18th May 2018 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், மே 21-ம் தேதி முதல் ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளனர்.
    இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே.அருணகிரி கூறியது: 
    தமிழகத்தில் உள்ள 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, வழக்கு நிலுவையில் உள்ளது.
    இந்நிலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஏற்கனவே பதவியில் இருந்த நிர்வாகக் குழுவின் பதவிக்காலம், கடந்த மே 8-ம் தேதியுடன் முடிந்து விட்டது. அரசு சார்பில் கூட்டுறவு சங்கங்களுக்கு செயலாட்சியரும் நியமிக்கப்படவில்லை. 
    இதனால் சங்க உறுப்பினர்களுக்கு கடன் வழங்க முடியாமலும், வைப்புத் தொகையை  திரும்ப வழங்க முடியாமலும், பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வு கால நிதிப் பலன்களை வழங்க முடியாமலும் நிர்வாகம் முடங்கியுள்ளது.
    இந்தப் பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து 
    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பணியாளர்கள் மே 21 ஆம் தேதி முதல் ஒட்டு மொத்த விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளோம். 
    இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் 
    சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளருக்கு மனு அளித்துள்ளோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai