Enable Javscript for better performance
தேனி மாவட்டத்தில் பால் பண்ணை அமைக்க அரசு மானியம்- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் சிறிய அளவிலான பால் பண்ணை அமைக்க விரும்புவோர், அரசு மானிய உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
      இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: 
    இத் திட்டத்தின் கீழ் அரசு மானிய  உதவி பெற மாட்டுக் கொட்டகை அமைப்பதற்கு சொந்தமாகவோ, குத்தகை அடிப்படையிலோ 300 சதுர அடி நிலமும், இறவை பாசனத்தில் தீவனம் பயிரிட ஒரு ஏக்கர் நிலமும்  வைத்திருக்க வேண்டும். 
    மொத்த திட்ட மதிப்பீடூ ரூ.5 லட்சத்தில், பயனாளி 75 சதவிகிதம் பங்களிப்பு செலுத்த வேண்டும். அரசு சார்பில் 25 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 
    விருப்பமுள்ளவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் கால்நடை உதவி மருத்துவரிடம் மே 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai