Enable Javscript for better performance
போடியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    போடி நகராட்சியில் டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  நகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நகர் நல அலுவலர் பா.ராகவன் தலைமையில் நடைபெற்றது. 
    இதனைத்தொடர்ந்து நகராட்சியிலிருந்து டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.   பின்னர் போடி அரசு மருத்துவமனையில் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் நகர் நல அலுவலர், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ரவீந்திரநாத் மற்றும் சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 
    பின்னர் நகராட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai