Enable Javscript for better performance
போடியில் வருவாய் தீர்வாயம்:  ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    போடியில் வருவாய் தீர்வாயம்:  ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு

    By DIN  |   Published on : 18th May 2018 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போடியில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் மனுக்களை அளித்தனர். 
    தேனி மாவட்டத்தில் மே 15 ஆம் தேதி முதல் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. போடியில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி பங்கேற்று மனுக்களை பெற்றார். 
    இதில் போடி வட்டத்தில் போடி, ராசிங்காபுரம், கோடாங்கிபட்டி ஆகிய உள்வட்டங்களை சேர்ந்த 15 வருவாய் கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் நடைபெற்று வருகிறது.
     முதல் நாள் வருவாய் தீர்வாயத்தில் 71 மனுக்கள் பெறப்பட்டு 28 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. இரண்டாம் நாள் மே 16 ஆம் தேதி 93 மனுக்கள் பெறப்பட்டு 18 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. 3 ஆம் நாளான வியாழக்கிழமை 140 மனுக்கள் பெறப்பட்டு விசாரிக்கப்பட்டன. தீர்வாயத்தில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு செய்தல், உதவி தொகை வேண்டுதல் உள்ளிட்ட மனுக்கள் அதிகம் பெறப்பட்டது.
        இந்தியன் குரல் அமைப்பின் தெண்மண்டல ஒருங்கிணைப்பாளர் அ.ராமகிருஷ்ணன், போடி பகுதியில் நீர் நிலைகள், கண்மாய், குளம், மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதுகுறித்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி உத்திரவிட்டார்.
    வருவாய் தீர்வாயத்தில் கிராம கணக்குகளும் தணிக்கை செய்யப்பட்டன. இதில் போடி வட்டாட்சியர் ஆர்த்தி, துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai