ஆண்டிபட்டி, போடியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தேசிய பேரிடர் மேலாண்மை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை  நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தேசிய பேரிடர் மேலாண்மை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை  நடைபெற்றது.
ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை வட்டாட்சியர் அர்ஜூனன், மாவட்ட பாதுகாப்பு மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகா தேவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், நிலநடுக்கம், புயல், வெள்ளம், வறட்சி மற்றும் தீ விபத்து போன்ற இயற்கை பேரிடரின்போது ஆபத்துகளை எவ்வாறு எதிர்கொள்வது, என பயிற்சி அளிக்கப்பட்டது.
 தண்ணீர் மற்றும் தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றி முதலுதவி அளிக்க வேண்டும், பிளாஸ்டிக் தண்ணீர் கேன் மூலம் மழை, வெள்ளத்தில் தவிக்கும் மக்களை எவ்வாறு காப்பற்றுவது, தண்ணீர் குடங்கள் மூலமாக முதியவர்களை  காப்பாற்றும் முறை போன்றவை குறித்து பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்புத் துறையினர்  செயல்விளக்கம் அளித்தனர்.
 இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) க.பழனி, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்லப்பாண்டியன், பூஞ்சோலை அறக்கட்டளை தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போடி: போடியில் பேரிடர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
 வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை துறை சார்பில், போடி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை வட்டாட்சியர் ஜே.கே.ஆர்த்தி தொடங்கி வைத்தார். துணை வட்டாட்சியர்கள் ரத்தினம், ராமராஜ், வருவாய் ஆய்வாளர் ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இதில், பள்ளி மாணவர்கள் திரளாக பங்கேற்று, சைக்கிளில் சென்றனர். பேரணி கட்டபொம்மன் சிலை, திருவள்ளுவர் சிலை, தேவர் சிலை, பேருந்து நிலையம் வழியாக போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
 அதைத்தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. இதில், போடி தீயணைப்பு நிலைய வீரர்கள் பங்கேற்று தீத்தடுப்பு, வெள்ள நேரங்களில் முதலுதவி போன்றவை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com