பெரியகுளம் பகுதியில் சாரல் மழை

பெரியகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெரியகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 பெரியகுளம் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மழை பெய்யாததால் கண்மாய்களில் நீர்மட்டம் குறைந்து வறண்டு காணப்படுகிறது. அதேபோல் 115 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் படிப்படியாக  குறைந்து 82 அடியாக உள்ளது. பெரியகுளம் நகரை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.  இந்நிலையில் வியாழக்கிழமை மாலை பெரியகுளம் பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்தால் நிலத்தடி நீர் மட்டம் பெருகி, விவசாயப் பணிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com