அதிமுக கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது: விஜய பிரபாகரன் பேச்சு

அதிமுக கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது என, தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசினார். 

அதிமுக கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது என, தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசினார். 
       தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ப. ரவீந்திரநாத் குமார், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆ. லோகிராஜன் ஆகியோருக்கு ஆதரவாக, ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகே வெள்ளிக்கிழமை விஜய பிரபாகரன் பேசியதாவது:
       விஜயகாந்த் விரைவில் பிரசாரத்தில் ஈடுபடுவார். மத்தியிலும்-மாநிலத்திலும் ஒத்த  கருத்துடைய கட்சிகளின் ஆட்சி அமைந்தால்தான், மக்களுக்கு அனைத்து நலத் திட்டங்களும் கிடைக்கும். மத்தியில் பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால்தான் பொதுமக்களுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
      திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தலுக்கு பின் காணாமல் போய்விடும்.  அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளின் மெகா கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது. இத்தேர்தலில் இக்கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். 
    எனவே, பொதுமக்கள் அனைவரும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com