சுடச்சுட

  

  அதிமுக மக்களவை மற்றும் சட்டப்பேரவை வேட்பாளர்கள் ஆண்டிபட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
   ஆண்டிபட்டி தொகுதிக்குப்பட்ட கண்டமனூர், கா.விலக்கு, சக்கம்பட்டி, பாப்பம்மாள்புரம், கொண்டமநாயக்கன்பட்டி  மற்றும் பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஆண்டிபட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் லோகிராஜன் ஆகியோர் பிரசாரம் செய்தனர். 
  அப்போது பிரசாரத்தில் ரவீந்திரநாத்குமார் பேசியதாவது: இந்த பகுதியில் தண்ணீர் பிரச்னை அதிகமாக உள்ளது. தேர்தலுக்குப்பின் அனைத்துப் பகுதிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து அனைத்து மக்களுக்கும் கூட்டுக் குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுப்பேன். விவசாயத்திற்கான நீராதாரங்கள் மேம்பட கண்மாய், குளங்களை தூர்வாரி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுப்பேன். நூறு நாள் வேலை திட்டத்தின் நாள்களை இருநூறு நாள்களாக உயர்த்த நடவடிக்கை எடுப்பேன். ஆண்டிபட்டியில் பொதுமக்களின் வெகுநாள் கோரிக்கைகளான புறவழிச்சாலை திட்டம், வைகை அணை தூர்வாருதல், தேனி, மதுரை மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம்- மயிலாடும்பாறை சாலை திட்டம் நிறைவேற நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai