சுடச்சுட

    

    தேனியில் கல்லூரி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரசார நடனம்

    By DIN  |   Published on : 16th April 2019 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் "பிளாஸ் மாப்' என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பிரசார நடன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
    தேனி, நேருசிலை அருகே விழிப்புணர்வு பிரசார நடன நிகழ்ச்சியை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார். சாலை மற்றும் முக்கிய தெரு சந்திப்புகளில் கூடும் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் திடீரென தோன்றி, தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 3 நிமிடம் விழிப்புணர்வு நடனமாடி விட்டு கலைந்து செல்கின்றனர். 
      இந்த விழிப்புணர்வு பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய இடங்களிலும் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai