ஆண்டிபட்டியில் குடிநீர் விநியோகத்தில் முறைகேடு: பொதுமக்கள் புகார்

ஆண்டிபட்டி பேரூராட்சியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரில் முறைகேடு நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆண்டிபட்டி பேரூராட்சியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரில் முறைகேடு நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டத்துக்காக ரூ.14 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி வைகை அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரிக்க ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் சுத்திகரிப்பு நிலையம்  அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் நகர்பகுதிக்கு விநியோகிக்கப்படுகிறது. தற்போது வைகை அணையில் 41.80 அடிக்கு தண்ணீர் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. நகர்பகுதியில் 10 அல்லது 15 தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீரின்றி பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதையடுத்து நகர்பகுதியில் சீராக குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஆண்டிபட்டி நகரில் குடிநீர் பிரச்னை வெகுநாள்களாக இருந்து வந்தது. மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை அரசு கொண்டு வந்தது. அதன்படி இரண்டு தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த திட்டத்திலும் முறைகேடு நடைபெற்று வருகிறது. தற்போது தேர்தல் பணிகளுக்கு பேரூராட்சி அலுவலக அதிகாரிகள் ஒரு மாதமாக சென்று விட்டதால்  ஊழியர்கள் எவரும் பணிகளை சரிவர செய்வதில்லை.
 மேலும் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வரும் தண்ணீரை சட்ட விரோதமாக டிராக்டர் மூலம் பிடித்து தனியார் தண்ணீர் கேன் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் உணவகங்கள், தேநீர் கடைகள், திருமண மண்டபங்களுக்கும் வழங்குவதால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com