சுடச்சுட

  

  தேனி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை தீவிரமாக ஈடுபட்டனர்.  
  தேனி நேரு சிலை அருகே, மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து பேசினார். அமமுக வேட்பாளர் தங்க. தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் கே. கதிர்காமு ஆகியோர், தேனி அல்லிநகரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
  தேனி பங்களாமேடு, நேரு சிலை, அல்லிநரகரம், பொம்மையகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராதகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார். தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 30 பேரும், பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதியில் 16 வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில், தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் பரபரப்பின்றி ஓய்ந்தது.  
  கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இறுதி கட்ட பிரசாரத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக வேட்பாள ப. ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து பிற்பகல் 3 மணிக்கு உத்தமபுரம் என்.எஸ்.கே. திடலில் பேசினார்.
  தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காலையில் லோயர் கேம்ப்பில் உள்ள பென்னி குயிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, லோயர் கேம்ப், கூடலூர், கம்பம் ஆகிய பகுதிகளில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  
  கம்பம்  நகர திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் என்.எஸ்.கே. திடலில் இருந்து பிரசார ஊர்வலம் தொடங்கி, முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai