சுடச்சுட

  

  தேனி மாவட்டம் சின்னமனூரில் அருள்மிகு பூலாநந்தீஸ்வர் உடனுறை சிவகாமி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை சுவாமி அம்மனின் தேரோட்டம் நடைபெறுகிறது.
  அருள்மிகு பூலாநந்தீஸ்வர் உடனுறை சிவகாமி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம்  துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சுவாமி அம்மனின் திருக்கல்யாண வைபவம் புதன் கிழமை நடைபெற்றது. அதனை தொடர்ந்து, வியாழக் கிழமை காலையில் சுமாமி அம்மனின் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் மாலை 5 மணி அளவில் ,தேரடியில் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடத்தை பிடித்து தேரை நிலையிலிருந்து இழுத்து செல்வார்கள்.  வடக்கு ரத வீதி  என  முக்கிய விதிகள் வழியாக சென்ற செக்காமுக்கில்  நிறுத்தப்பட்டு இரவு முழுவதும்  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் 9 மணியளவில் செக்காமுக்கிலிருந்து கிழக்கு ரத வீதி வழியாக கண்ணாடி முக்கு சந்தில் தேர் நிறுத்தப்பட்டு மாலை வரையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு நிறுத்தி வைக்கப்படும். பின்னர் மீண்டும் மாலையில் 5 மணி அளவில் செக்காமுக்கிலிருந்து,  சீப்பாலக்கோட்டை சாலை, தேனி நெடுஞ்சாலை, மார்க்கையன்கோட்டை ரவுண்டான வழியாக தேர் நிலைக்கு சென்று விடும்.
  இந்த தேரோட்டத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தலைமையில்  நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai