வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா:  தேனி அதிமுக வேட்பாளர் மீது புகார்

தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சார்பில் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்களுக்கு பணம்

தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சார்பில் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புதன்கிழமை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 
எஸ்.ராதாகிருஷ்ணன் புகார் மனு அளித்தார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் எஸ்.ராதாகிருஷ்ணன் அளித்த மனு விபரம்: தேனி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாருக்கு ஆதரவாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளருக்கு பணம் கொடுத்து வருகின்றனர். 
இவர்களது ஏற்பாட்டில் போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சவீதா மீது போடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதியை மீறி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வரும் அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com