கம்பத்தில் புகையிலை பொருள்கள் விற்றவர் கைது
By DIN | Published On : 21st April 2019 01:17 AM | Last Updated : 21st April 2019 01:17 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், கம்பத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கம்பம் ஆலமரத் தெருவில் கடை வைத்திருப்பவர் மணிகண்டன்(45). இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பதாக கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் சார்பு -ஆய்வாளர் சவடமுத்து தலைமையில் போலீஸார் அங்கு சோதனை செய்ததில் 36 பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டனை கைது செய்து, அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.