முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
பெண்கள் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு
By DIN | Published On : 04th August 2019 03:56 AM | Last Updated : 04th August 2019 03:56 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கம்பம் ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்லூரி நிறுவன செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். உத்தமபாளையம் சார் ஆட்சியர் ரா.வைத்திநாதன் கலந்து கொண்டு, பேரிடர் மேலாண்மை குறித்தும், இதற்கான செல்லிடப்பேசி செயலி மூலம் தங்களுக்கு ஏற்பட இருக்கும் இடர்கள் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கினார்.
கருத்தரங்கில் கல்லூரி இணைச் செயலாளர் ரா.வசந்தன், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் , ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் ஆகியோர் பேசினர். முதல்வர் ஜி.ரேணுகா வரவேற்றார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ரா.தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.