Enable Javscript for better performance
ஆண்டிபட்டி அருகே முனீஸ்வரன் கோயில் ஆடிப் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அருகே முனீஸ்வரன் கோயில் ஆடிப் பொங்கல் விழா

    By DIN  |   Published on : 05th August 2019 07:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி அருகே உள்ள டி. புதூர் முனீஸ்வரன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், கிடா வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.புதூர் கிராமத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழாவும், மறுநாள் பொங்கல் விழாவும் நடைபெறும். பொங்கல் விழாவை முன்னிட்டு, முனீஸ்வரன் மற்றும் காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.    
    மேலும், பொங்கல் வைத்து, கிடா வெட்டி படையல் வைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பொதுமக்களுக்கான அன்னதானத்தை, ஆண்டிபட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மகாராசன் தொடக்கி வைத்தார். இதில், சுற்றுவட்டாரத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். 
    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai