ஆண்டிபட்டி அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

ஆண்டிபட்டி அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆண்டிபட்டி அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் டி.சுப்புலாபுரம் ஊராட்சிக்குள்பட்ட டி. அணைக்கரைப்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்துக்கு, ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வைகை அணை - சேடப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இதில், இக்கிராமத்துக்கு வரும் குடிநீர் குழாய்களில் சிலர் சட்டவிரோதமாக குழாய்கள் அமைத்து, தண்ணீரை திருடும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. மேலும், கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள மோட்டார்கள் பழுதாகி ஓராண்டாகியும் சரிசெய்யப்படவில்லை. இதனால், கிராமத்தினர் குடிநீருக்காக 2 கி.மீ. தொலைவு சென்று தோட்டத்தில் தண்ணீர் பிடிக்கவேண்டிய நிலை உள்ளது. கிராமத்தில் தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. 
அதேபோல், ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட வேண்டிய கால்வாய் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளிகளும் செய்யப்படவில்லை. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சீராக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியும், அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டியும், ஆண்டிபட்டி-வத்தலகுண்டு சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தகவலறிந்த ஆண்டிபட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com