ஆண்டிபட்டி அருகே முனீஸ்வரன் கோயில் ஆடிப் பொங்கல் விழா

ஆண்டிபட்டி அருகே உள்ள டி. புதூர் முனீஸ்வரன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், கிடா வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆண்டிபட்டி அருகே உள்ள டி. புதூர் முனீஸ்வரன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், கிடா வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.புதூர் கிராமத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழாவும், மறுநாள் பொங்கல் விழாவும் நடைபெறும். பொங்கல் விழாவை முன்னிட்டு, முனீஸ்வரன் மற்றும் காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.    
மேலும், பொங்கல் வைத்து, கிடா வெட்டி படையல் வைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பொதுமக்களுக்கான அன்னதானத்தை, ஆண்டிபட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மகாராசன் தொடக்கி வைத்தார். இதில், சுற்றுவட்டாரத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். 
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com