ஊக்கத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்காத விவசாயிகள் பட்டியல் வெளியீடு

தேனி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை

தேனி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெறுவதற்கு இதுவரை விண்ணப்பிக்காத விவசாயிகளின் பட்டியல், அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6,000 கௌரவ ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 44,422 விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெறுவதற்கு தங்களது பெயர்களை பதிவு செய்யாத விவசாயிகளின் பட்டியல்  கிராம வாரியாக மாவட்ட நிர்வாகத்தின் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள, ஊக்கத் தொகை பெறுவதற்கு தகுதியுள்ள விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை,  குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு பாஸ் புத்தகம், பட்டா நகல் ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com