போடிமெட்டு மலைச்சாலையில் பாறைகள் சரிந்து போக்குவரத்து பாதிப்பு

போடிமெட்டு மலைச்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பாறை சரிவுகள் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போடிமெட்டு மலைச்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பாறை சரிவுகள் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     போடி பகுதியில் சில தினங்களாக பரவலான சாரல் மழை பெய்தது. போடிமெட்டு மலைச்சாலையிலும் மழை பெய்து வருவதால் சிறு சிறு மண் சரிவுகள், பாறை சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை போடிமெட்டு மலைச்சாலையில் எஸ் வளைவுக்கு மேல் பகுதியில் சிறு சிறு பாறைகள் மொத்தமாக சரிந்து விழுந்தன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.     இதனையடுத்து போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஷாஜகான் மற்றும் போலீஸார் அப்பகுதியில் சென்று வாகன ஓட்டிகள் உதவியுடன் பாறைகளை சாலை ஓரத்திற்கு போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்து சீரடைந்தது. 
      தொடர்ந்து இச் சாலையை போலீஸார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பகலில் இந்த சாலையில் மூங்கில் மரங்கள் வோரோடு சாய்ந்தன. இதனால் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையும் போலீஸார் மற்றும் வாகன ஓட்டிகள் வெட்டி அப்புறப்படுத்தினர். ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.     இந்நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், போடி டி.எஸ்.பி. ஈஸ்வரன், ஆய்வாளர்கள் வெங்கடாசலபதி, ஷாஜகான் ஆகியோர் போடி முந்தல், குரங்கணி மலைக் கிராமங்களில் ஆய்வு செய்தனர். அப்போது தொடர் மழை பெய்வதால் மலை கிராம மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், பாதுகாப்பான பகுதிகளில் தங்க வேண்டும் என எச்சரித்தனர். மேலும் குரங்கணி பகுதியில் கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் செல்வதையும் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com