சுடச்சுட

  

  சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

  By DIN  |   Published on : 14th August 2019 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுருளி அருவியில் 5 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் செவ்வாய்க்கிழமை முதல்  மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
   தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 7 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
  தற்போது மழை குறைந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கும் குறைந்துள்ளது. 
  இதனால், செவ்வாய்க்கிழமை முதல் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சாரல் மழையில் நனைந்தவாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai