சுடச்சுட

  

  தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனைக் கடை அமைப்பதற்கு உரிமம் பெற ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் பட்டாசு கடை அமைப்பதற்கு நிரந்த உரிமம் பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களது கடை உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்.
  தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனைக் கடை அமைக்க விரும்புவோர், வெடிபொருள் சட்ட விதிகளின்படி உரிய ஆவணங்கள், ரூ.500 பதிவு கட்டணம் செலுத்தியதற்கான விபரம் ஆகியவற்றுடன், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள்  இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். 
  தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வரும் செப்டம்பர் 27 ஆம் தேதிக்குள் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai