சுடச்சுட

  

  தேனி மாவட்ட அதிமுக அலுவலக விவகாரம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

  By DIN  |   Published on : 14th August 2019 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்ட அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து இருதரப்பினரிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமரச கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. 
    தேனி மாவட்ட அதிமுக கட்சி அலுவலகம் 2015 ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகம் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பெயரில் உள்ளது. இவர் தற்போது அமமுக கட்சியில் உள்ளார்.  இந்த நிலையில் இந்த கட்சி அலுவலகத்துக்கு அதிமுகவினரும் அமமுகவினரும் உரிமைகோரி வருகின்றனர். இதுகுறித்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயப்பிரித்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெற்றது.  இதில் அதிமுக சார்பில் வழக்குரைஞர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். அதே போல் அமமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் மகேந்திரன், முத்துச்சாமி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.  இரு தரப்பினருக்கும் இடையே மாலை 4 மணிமுதல் இரவு வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எவ்வித உடன்பாடும் எற்படவில்லை. இதனால் தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai