சுடச்சுட

  

  பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில்  4 பிரிவுகளும் இயக்கம்: 151 மெகாவாட்  மின்சாரம் உற்பத்தி

  By DIN  |   Published on : 14th August 2019 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  லோயர் கேம்ப் பகுதியில் உள்ள பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில், திங்கள்கிழமை மாலை முதல் நான்கு மின்னாக்கிகளும் இயங்கிவருகின்றன. இதன் மூலம் 151 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. 
  முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு அதிகரித்த நிலையில் தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கியது.
   மொத்தம் உள்ள  நான்கு மின்னாக்கிகளில் முதலாவது மின்னாக்கி ஆகஸ்ட் 4 இல் இயங்கியது. அதன்பிறகு ஆகஸ்ட் 8 ஆம் தேதி  இரு மின்னாக்கிகள் இயங்கின. அதன் பின்னர் திங்கள்கிழமை காலை மூன்று மின்னாக்கிகளும், அதே நாள் மாலையில், நான்கு மின்னாக்கிகளும் இயங்கத் தொடங்கின. 
   செவ்வாய்க்கிழமையும் நான்கு மின்னாக்கிகள் இயக்கப்பட்டன. மூன்று மின்னாக்கிகளில் மணிக்கு தலா  42 மெகா வாட்டும், நான்காவது மின்னாக்கியில் 35 மெகா வாட் மின்சார உற்பத்தியும் நடைபெறுகிறது. மொத்தம் 151 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகி வருகிறது. 
   முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைவால் அணைக்குள் நீர்வரத்து குறைந்துள்ளது. திங்கள்கிழமை விநாடிக்கு 3 ஆயிரத்து 729 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. செவ்வாய்க்கிழமை இரண்டாயிரத்து 404 கன அடியாக குறைந்தது. 
   அணை  நிலவரம்: நீர்மட்டம் 130 அடி, அணைக்குள் நீர் இருப்பு, 4 ஆயிரத்து 697 மில்லியன் கன அடி, நீர் வரத்து 2 ஆயிரத்து 404 கன அடி, தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு விநாடிக்கு 1700 கன அடி ஆக இருந்தது.   பெரியாறு அணைப் பகுதியில் 5.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 3.6 மி.மீ., மழையும் பெய்தது. தமிழகப்பகுதிகளான கூடலூர், உத்தமபாளையம், வீரபாண்டி பகுதிகளில் மழை இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai