சின்னமனூர் அருகே அங்கன்வாடி மையத்திற்கு கல்விச்சீர்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான கல்வி சீர்வரிசை பொருள்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான கல்வி சீர்வரிசை பொருள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
 சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சியிலுள்ள விஸ்வநாதபுரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையம் பராமரிப்பின்றி அடிப்படை வசதியில்லாமல் இருந்ததால் குழந்தைகள் வருகையும் மிகக்குறைவாக இருந்தது.  இதற்கிடையே, இம்மைய பணியாளராக நியமிக்கப்பட்ட  அனீஸ்பாத்திமா, அவரது கணவரும் சமூக ஆர்வலருமான சிக்கந்தர் பாட்சா ஆகியோர் சுகாதார வளாகம், குடிநீர் வசதி, மின் விசிறி, குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருள்கள், 2 மேஜைகள், 20 நாற்காலிகள், எழுது பொருள்கள் ஆகியவற்றுக்கு ரூ. 1 லட்சம் செலவு செய்தனராம். மேலும், அங்கன்வாடி மையத்தை சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும், காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்ததால் பெற்றோர்கள் தாமாக முன்வந்து தங்கள் குழந்தைகளை சேர்த்துள்ளனர். தற்போது 15 குழந்தைகள் கல்வி கற்றுவருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மையத்தில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட திட்ட அலுவலர் ஹெலன்ரோஸி தலைமை வகித்தார்.
 அப்பிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி  மற்றும்  குழந்தை வளர்ச்சி அலுவலர் மயிலம்மாள் முன்னிலை விகித்தனர். மைய பணியாளர் அனீஸ் பாத்திமாக வரவேற்றார். விழாவில் சமூக ஆர்வலர் சிக்கந்தர் பாட்சா வழங்கிய கல்விச் சீர்வரிசை பொருள்களை மாவட்ட திட்ட அலுவலர் பெற்றுக்கொண்டார்.  அவர் இம்மையத்தை முன்மாதிரி மையமாக தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்தார். 
 இந்த விழாவில், பெற்றேர்கள், குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் ராஜம்மாள், முருகேஸ்வரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com