சுடச்சுட

  

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு புதன்கிழமை வந்த எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன், எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  
   தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் மகன் ராமச்சந்திரன் தேனி மாவட்டத்தில் புதன்கிழமை பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார். ஆண்டிபட்டிக்கு வந்த அவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
    நண்பர்களின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே தேனி மாவட்டத்திற்கு வந்துள்ளேன். என் தாத்தா ஆண்டிபட்டி தொகுதியில் நின்று வெற்றி பெற்று முதல்வரானார். எனவே அவர் நினைவாக உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளேன். தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறேன். தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது. தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன். மாவட்ட வாரியாக அமைப்பு தொடங்கும் எண்ணம் தற்போது இல்லை என்று கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai