சுடச்சுட

  

  தேனியில் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம் சார்பில் புதன்கிழமை, சங்கத்தில் மத்திய கால கடன் பெற்றிருந்த உறுப்பினரின் இறப்பிற்கு ரூ.8 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
   தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா கூட்டுறவு நூற்பாலை மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் மத்திய கால கடன் பெற்றிருந்த உறுப்பினர் தேனியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரது இறப்பிற்கு, காப்பீட்டுத் தொகையாக ரூ.8 லட்சத்திற்கான காசோலையை அவரது மனைவி காவேரியிடம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி வழங்கினார். 
    பெரியகுளம் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் முத்துக்குமார், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ராமகிருஷ்ணன், சங்கத் தலைவர் முத்துப்பாண்டி, செயலர் தர்மராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai