சுருளி அருவியில் வெள்ளம் குளிக்க மீண்டும் தடை

சுருளி  அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 

சுருளி  அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள தூவானம் அணை, அரிசிப்பாறை மற்றும் ஈத்தைப்பாறை நீரோடைகளில் இருந்து சுருளி அருவிக்கு தண்ணீர் வருகிறது.  அண்மையில் அதிக மழை பெய்ததால் அருவியில் கடந்த திங்கள்கிழமை நீர்வரத்து அதிகரித்தது. '
இதனால் அன்றைய தினம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு நீர்வரத்து குறைந்து இருந்ததால்,  செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு நீரூற்றுகள் மற்றும் அணைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், புதன்கிழமை சுருளி அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து வனத் துறையினர் அருவியில் குளிக்க தடை விதித்தனர். 
இதனால் புதன்கிழமை அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன்  திரும்பி சென்றனர்.  
இது பற்றி வனத்துறையினர் கூறும் போது, தண்ணீர் வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, குறைந்ததும் குளிக்க அனுமதியளிக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com