தேனி மாவட்டத்தில் கிராம இளைஞர் விளையாட்டுக் குழுக்கள் அமைப்பு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட மற்றும் வட்டார அளவில் கிராம இளைஞர் விளையாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அம்மா கிராம இளைஞர் விளையாட்டுக் குழு திட்டத்தின் கீழ், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை துணைத் தலைவராகவும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், பொதுச் சுகாதார துணை இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், பேரூராட்சிகள் உதவி இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், உடற்கல்வி ஆய்வாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், விளையாட்டு சங்கங்களின் மாவட்டச் செயலர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகவும், மாவட்ட விளையாட்டு அலுவலரை கூட்டுநரகாவும் கொண்ட முதல் நிலையக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வட்டார அளவில் வட்டாட்சியர் தலைமையில், கிராம நிர்வாக அலுவலரை அமைப்பாளராகவும், காவல் சார்பு ஆய்வாளர், உடற்கல்வி ஆசிரியர் அல்லது ஆசிரியர் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களை உறுப்பினர்களாகவும், ஊராட்சி செயலரை கூட்டுநராகவும் கொண்ட 2 ஆம் நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிராம விளையாட்டு குழுக்களின் செயல்பாடு குறித்து ஆட்சியர் பேசியது: கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் தலைமைப் பண்பு, கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, பயிற்சி அளித்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்ய கிராம இளைஞர்கள் விளையாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு மூலம் கபடி, கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து ஆகிய விளையாட்டுகளில் ஊராட்சி மற்றும் பேரூராட்சிகள் அளவிலும், மாவட்ட அளவில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு இடையிலும் போட்டிகள் நடத்தப்படும். இதில் சிறந்த விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டு மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவர். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தேவையான உதவி மற்றும் சலுகைகள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா. திலகவதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் கா.சுப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com