கம்பத்தில் கோகுலாஷ்டமி சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், சுருளி அருவி பகுதிகளில் உள்ள கிருஷ்ணன் கோயில்களில்   கோகுலாஷ்டமியை

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், சுருளி அருவி பகுதிகளில் உள்ள கிருஷ்ணன் கோயில்களில்   கோகுலாஷ்டமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள்  நடைபெற்றன.
கம்பம் கம்பராயப் பெருமாள் காசி விசுவநாத சுவாமி கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன.
இதே போல் நாட்டுக்கல் நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழு, ஓடைக்கரைத்தெரு கண்ணன் கோயில், உத்தபுரம்  நவநீதகிருஷ்ண கோயில், கூடலூரில் உள்ள பெருமாள் கோயில், சுருளி அருவியில் உள்ள கிருஷ்ணன் கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. 
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாதலால், சுருளி அருவியில் ஏராளாமான சுற்றுலா பயணிகளும் இதில் கலந்து கொண்டு கிருஷ்ணரை வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com