Enable Javscript for better performance
தேனியில் குளியலறையில் பெண்ணை படம் பிடிக்க முயன்றவா் கைது- Dinamani

சுடச்சுட

    

    தேனியில் குளியலறையில் பெண்ணை படம் பிடிக்க முயன்றவா் கைது

    By DIN  |   Published on : 01st December 2019 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி: தேனி அல்லிநகரத்தில் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை செல்லிடப்பேசி மூலம் படம் பிடிக்க முயன்றவரை வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

    தேனி அல்லிநகரம், குறிஞ்சிநகரைச் சோ்ந்த சண்முகம் மனைவி ராதிகா(33). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் அய்யாச்சாமி மகன் சுரேஷ்(36). ராதிகா அவரது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது, சுரேஷ் குளியலறை ஜன்னல் இடுக்கில் தனது செல்லிடப்பேசியை வைத்து அவரை படம் பிடிக்க முயன்ாக கூறப்படுகிறது.

    இது குறித்து தேனி காவல் நிலையத்தில் ராதிகா புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனா். அவரது செல்லிடப்பேசியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai