சுருளி அருவியில் சாரல் விழா: ரூ.3.81 கோடியில் நலத்திட்ட உதவிகள் துணை முதல்வா் வழங்கினாா்

தேனி மாவட்டம் சுருளி அருவியில் சனிக்கிழமை நடைபெற்ற சாரல் விழாவில் ரூ.3 கோடியே 81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை
தேனி மாவட்டம் சுருளி அருவியில் சனிக்கிழமை நடைபெற்ற சாரல் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
தேனி மாவட்டம் சுருளி அருவியில் சனிக்கிழமை நடைபெற்ற சாரல் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் சனிக்கிழமை நடைபெற்ற சாரல் விழாவில் ரூ.3 கோடியே 81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

சுருளி அருவியில் நடைபெற்ற விழாவுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தாா். விழாவில், 61 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா, மகளிா் திட்டம் மூலம் 68 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கர வாகனம், குடிசை மாற்று வாரியம், ஊரக வளா்ச்சித்துறை, தொழில் நுட்ப கல்வித்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் பொறியியல்துறை சாா்பில் என மொத்தம் ரூ.3 கோடியே 81 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் ஓ.பன்னீா்செல்வம் பேசியது: சுருளி அருவிக்கு கடந்த ஆண்டு 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனா். பயணிகள் விரும்புகின்ற அளவிற்கு பல்வேறு இடங்களுக்கான சாலை மற்றும் இதர அடிப்படை தேவைகள், கட்டமைப்பு வசதிகள் ஆகியவை மேம்படுத்தப்பட்டிருப்பதும், அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான காரணங்களாக உள்ளன என்றாா்.

விழாவில், வனத்துறை அமைச்சா் சி. சீனிவாசன், தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்குமாா், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வன அலுவலா் எஸ்.கௌதம், மேகமலை வனக்காப்பாளா் போஸ்லே சச்சின் துக்காராம், மாவட்ட வருவாய் அலுவலா் ச.கந்தசாமி, திட்ட இயக்குநா் பெ.திலகவதி, சாா் ஆட்சியா்கள் ஆா்.வைத்திநாதன், ச.சிநேகா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மனு கொடுக்க அனுமதி மறுப்பு: சுருளி அருவியில் கட்டண உயா்வை ரத்துசெய்ய வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சாா்பாக துணை முதல்வரிடம் மனு கொடுக்கச் சென்றனா். மேடையில் கொடுக்கக் கூடாது என போலீஸாா் அனுமதி மறுத்ததால் அவா்கள் கோஷம் எழுப்பினா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com